GALLERY
குடும்பத்தினருடன் என்ஜாய் பண்ணும் பிரதீப் ஆண்டனி.. பலரும் பார்க்காத லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.
இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பும், நேர்த்தியான சுபாவத்தின் மூலம் மக்களை கவர்ந்தார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான வாழ் திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக நடித்தார்.
இதனையடுத்து கவினின் டாடா திரைப்படத்திலும் பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிரதீப் ஆண்டனி வாழ்க்கையில் திருப்புமுனையாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பிரதீப் ஆண்டனி தான் டைட்டிலை வென்றிருப்பார் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பிரதீப் ஆண்டனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனது குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.