வெளிநாட்டில் மாஸ் காட்டிய விடுதலை பட இயக்குனர் வெற்றிமாறன் .. இணையத்தில் வைரலாகும் க்யூட் பேமிலி போட்டோஸ்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் மாஸ் காட்டிய விடுதலை பட இயக்குனர் வெற்றிமாறன் .. இணையத்தில் வைரலாகும் க்யூட் பேமிலி போட்டோஸ்..

Published

on

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி அடையாளத்தையே பதித்த இயக்குனர் வெற்றிமாறன், பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உண்மையில் நடந்த சம்பவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதற்கு அதிக பாராட்டுகளை முதல் படத்திலேயே பெற்றுள்ளார்.

இவரின்  இரண்டாவது படமான  “ஆடுகளம்” திரைப்படத்தை இயக்கியதன்  மூலம் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவர் இயக்கத்தில் உருவான படங்களில் அதிகமாக தனுஷ் நடிப்பிலேயே வெளியாகி உள்ளது.

Advertisement

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விடுதலை 1 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் விடுதலை 2 படத்தின் பணிகளையும் முடித்து விட்ட நிலையில்  இந்த படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் விடுதலை 1 மற்றும் 2 படத்தை நெதர்லாந்தில் உள்ள ரோட்டோடம் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டுள்ளது; படம் முடிந்த நிலையில் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் 10 நிமிடம் எழுந்து நின்று கை தட்டினார்கள்; இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்துள்ளது.

Advertisement

இந்த நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்தே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரோட்டோர் டேம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் அவரது காதல்  மனைவி ஆர்த்தி மற்றும் பூந்தென்றல் என்ற மகள், கதிரவன் என்ற மகனுடன் கலந்து கொண்ட க்யூட் பேமிலி  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement