மேக்கப் இல்லாமல் தேவதை போல் ஜொலிக்கும் பாகுபலி தேவசேனா.. இணையத்தில் வெளியான அன்சீன் போட்டோஸ் வைரல் .. - cinefeeds
Connect with us

GALLERY

மேக்கப் இல்லாமல் தேவதை போல் ஜொலிக்கும் பாகுபலி தேவசேனா.. இணையத்தில் வெளியான அன்சீன் போட்டோஸ் வைரல் ..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா; 2006 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான “இரண்டு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிஉலகில் அறிமுகமானார். தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை அனுஷ்கா நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் லேசான கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட இவர் சூப்பர் டூப்பர்  ஹிட் படமான அருந்ததி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்றார். இந்த படம் இவருக்கு சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாகவே இருந்தது.

Advertisement

அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்துள்ள நடிகை அனுஷ்காவிற்கு சூர்யா நடிப்பில் வெளிவந்த “சிங்கம்” திரைப்படம்  வெற்றி படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. அதாவது 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 79 கோடி வசூலை  ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் “பாகுபலி” ; இது தெலுங்கு ரீமேக் படமாகும். இதனை தொடர்ந்து  இந்த படத்தை ஹிந்தியிலும்  மலையாளத்திலும்  டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ராகவேந்திரா ராவ் தயாரிப்பில், இயக்குனர் ராஜமவுலி  இயக்கத்தில் 3D கட்டமைப்பில் 250 கோடி பட்ஜெட்டில் உருவான மிக பிரம்மாண்டமான திரைப்படமாகும். இதில் பிரபாஸ், ராணா, தமன்னா போன்றவர்கள் முக்கிய  கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு எம் எம் கீர கீரவாணி இசையமைப்பாளராக பணியறியுள்ளார்.

தற்போது நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பாகுபலி திரைப்படத்தின்  ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் இல்லாமலும் மேக்கப் போடும் போது எடுத்த அன்சீன்  போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement