GALLERY
யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்ஷத்ராவின் குழந்தையா இது..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம் ..

தமிழ் சினிமாவில் ‘கிடாரி பூசாரி மகுடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.
இந்த சீரியல் மூலம் நட்சத்திராவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. இந்த நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ வள்ளி திருமணம்’ தொடரில் நடித்து வந்தார் நட்சத்திரா.
கடந்த ஜூலை மாதம் டாட்டூ ஆர்டிஸ்ட் விஸ்வா ஷாம் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார் நட்சத்திரா, எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நடந்த இந்த திருமணம் குறித்து ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சலசப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருந்த செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்தார் நக்ஷத்ரா. மேலும், நட்சத்திரா, விஸ்வா ஷாம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது; இந்த குழந்தைக்கு இதழ் என்று பெயர் சுட்டி உள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது சீரியல் நடிகை நட்சத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவிலுக்கு தன் அழகிய மகள் மற்றும் குடும்பத்துடன் சென்றுள்ள போட்டோக்களை பகிர்ந்துள்ளார்; இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.