GALLERY
சுட்டி குழந்தைகளுடன் மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் நடிகை ஹேமலதா.. இணையத்தை கலக்கும் பிறந்தநாள் போட்டோஸ் ..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானவர் நடிகை ஹேமலதா; இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்திலும்; சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்திலும் குழந்தையாக நடித்துள்ளார்.
அதன் பிறகு நடிகையாகவும் துணை நடிகையாகவும் சிறு சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வந்துள்ளார். வெள்ளி திரையில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் நுழைந்தார் நடிகை ஹேமலதா.
இவர் சன் டிவியில் சித்தி, மனைவி, தென்றல் என்ற தொடரிலும்; விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், அன்பே வா, ஜோடி நம்பர் ஒன் என்ற தொடரிலும் நடித்துள்ளார். இதில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார்.
மேலும், இவர் ஜீ தமிழில் புகுந்த வீடு என்ற தொடரிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை ஹேமலதாவின் அன்பு மகளின் மூன்றாவது பிறந்த நாளை சுட்டி குழந்தைகளுடன் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு நடிகை ஹேமலதா ரசிகர்கள் அனைவரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மீண்டும் எப்போது சீரியல் நடிக்க வருவீங்க என்ற ரசிகர்கள் கேள்விக்கு சீக்கிரத்தில் வருவேன் என்று இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.