பல வருடங்களுக்கு பிறகு அன்பு தோழிகளை சந்தித்த நடிகை சத்யா பிரியா.. இணையத்தில் அவரே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் .. - cinefeeds
Connect with us

GALLERY

பல வருடங்களுக்கு பிறகு அன்பு தோழிகளை சந்தித்த நடிகை சத்யா பிரியா.. இணையத்தில் அவரே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் ..

Published

on

80s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா; இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகுமார் நடிப்பில் வெளியான “மஞ்சள் முகமே வருக” என்ற படத்தின் ஹீரோயினியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து, இவர் நடிப்பில் வெளியான ரோஜா, பாட்ஷா, சின்ன கவுண்டர், சொல்ல மறந்த கதை போன்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே புகழையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். இதுவரை நடிகை சத்திய பிரியா 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்றும்; அதில்  50 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தமிழ் சினிமாவில் குறிப்பாக அம்மா கதாபாத்திரத்திலேயே அதிகமான  படங்களில் நடித்துள்ளார். வெள்ளி திரையில் களம் கண்ட நடிகை சத்திய பிரியா சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். தற்போது நடிகை சத்யபிரியா சன் டிவியின் டிஆர்பி ரேட்ங்கில்  முதலிடம் பெற்றுள்ள  “எதிர்நீச்சல்” சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, நடிகை சத்யபிரியா பெங்களூருவிற்கு சென்று உள்ள புகைப்படத்தையும்; அத்தோடு  பல வருடங்கள் கழித்து தனது தோழிகளை பார்த்து நெகிழ்ந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுத்துள்ளார்.

Advertisement

மேலும், இதில் முன்னதாக தனது நண்பர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement