ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. இணையத்தை கதறவிடும் போட்டோஷூட் .. - cinefeeds
Connect with us

GALLERY

ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. இணையத்தை கதறவிடும் போட்டோஷூட் ..

Published

on

சின்னத்திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரோபோ சங்கர் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்; மேலும் இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மகள் இந்திரஜாவும் ஒரு குறிப்பிட்ட தக்க நடிகை ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் “பாண்டியம்மா” கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார்.

Advertisement

மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு “பாகல்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும்  அறிமுகமானார். அதனை அடுத்து தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான கிராமபுற பொழுதுபோக்கு படமான “விருமன்” படத்திலும் நடித்துள்ளார்.

இந்திரஜா ரோபோ ஷங்கரின் நிச்சயதார்த்தம்  பிப்ரவரி 2 சென்னையில் நடந்தது, இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்திரஜா கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் கார்த்திக்குடன் தனது படங்களைப் பகிர்வதைக் காண முடிந்தது.

Advertisement

இந்திரஜா மற்றும் கார்த்திக் திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் சென்னையில் நடக்கும் இந்த பிரமாண்ட நிகழ்வுக்கு பல சினிமா நட்சத்திரங்களை அழைக்க ரோபோ ஷங்கர் திட்டமிட்டுள்ளார் .

மேலும், நடிகை இந்திரஜா திருமணத்திற்குப் பிறகும்  தனது சினிமா வாழ்க்கையைத் தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நிச்சயதார்த்த புகைபடம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in