LATEST NEWS
பல சொகுசு கார், பங்களா…. பிறந்தது முதல் சினிமாவில் மூழ்கிக் கிடக்கும்…. சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகி நடிகர், கதை ஆசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர்,சிறப்பாக நடனம் ஆடுபவர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமையை கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல திரைப்படங்களும் வெற்றியை தேடிக் கொடுத்தன. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
இந்நிலையில் சமீப காலமாக அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கே 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவிலயே மூழ்கி இருக்கும் சிம்புவுக்கு தனியாகவே 119 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் சொகுசு கார் மற்றும் பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரில் உள்ளதாம்.