சிம்புவின் 50-ஆவது படம்.. இயக்குனர் இவரா..? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சிம்புவின் 50-ஆவது படம்.. இயக்குனர் இவரா..? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!!

Published

on

பிரபல நடிகரான சிம்பு கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனையடுத்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். சிம்புவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் தனக்கு இருக்கும் திறமையை ஆரம்பத்தில் சரியாக பயன்படுத்தவில்லை.

சமீப காலமாக சிம்பு தனது திறமைகளை வெளிப்படுத்த முழு மூச்சாக முயற்சி செய்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிம்பு நடித்து வந்தார். இந்நிலையில் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அந்த படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

Advertisement

இதனையடுத்து சிம்பு அடுத்தடுத்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் சிம்பு சிறப்பாக நடித்திருந்தார். தற்போது சிம்பு தனது 48- வது படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். அதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

அதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக சிம்புவின் 49-வது படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிம்புவின் 50-ஆவது படம் குறித்து ஒரு புதிய அப்டேட் வெளியானது.

Advertisement

அதாவது சிம்பு தான் நடிக்கும் 50 வது படத்தை தானே இயக்கி தானே தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என தெரிகிறது. இதேபோல தனுஷம் தனது 50-வது படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement