கன்னத்தில் முத்தமிட்டால் புகழ் கீர்த்தனாவா இது?… மகளுடன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பார்த்திபன்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கன்னத்தில் முத்தமிட்டால் புகழ் கீர்த்தனாவா இது?… மகளுடன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பார்த்திபன்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

Advertisement

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் பார்த்திபன் தனது மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவரின் மகள் கீர்த்தனா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற திரைப்படத்தில் குழந்தையாக நடித்து அறிமுகமானவர். அதன் பிறகு இவர் உதவி இயக்குனராக பணியாற்ற சென்று விட்டார். பிறகு சினிமாவை விட்டு 2018 ஆம் ஆண்டு விலகி அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பார்த்திபன் தனது செல்ல மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Radhakrishnan Parthiban இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@radhakrishnan_parthiban)

Advertisement