அந்த நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவே கூடாது.. ரஜினி போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.. லோகேஷ் என்னதான் சொன்னாரு..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவே கூடாது.. ரஜினி போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.. லோகேஷ் என்னதான் சொன்னாரு..?

Published

on

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியானது. முன்னதாக லியோ படம் LCU-வில் வரும் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி எதிர்பார்ப்பை கூட்டி விட்டனர். அதுவே படத்திற்கு மைனஸ் பாயிண்டாக அமைந்தது.

இந்நிலையில் ரஜினியை வைத்து தலைவர் 171-வது படத்தை லோகேஷ் இயக்குகிறார். இந்த படத்திற்காக லோகேஷ் ரஜினியும் இணைந்து பேசி அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்களாம். லியோ படத்தின் கலமையான விமர்சனங்களுக்கு அதீத எதிர்பார்ப்பும் ஒரு காரணம் என கூறலாம்.

Advertisement

தலைவர் 171-வது படத்தில் தன் முந்தைய படங்களில் நடித்த எந்த நடிகர்களையும் நடிக்க வைப்பதில்லை என லோகேஷ் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். படம் முழுக்க இதுவரை தான் இணைந்து பணியாற்றாத நடிகர்களைத்தான் தலைவர் 171-வது படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

#image_title

ஏற்கனவே தனது படத்தில் நடித்த நடிகர்களை தலைவர் 171 வது படத்தில் நடிக்க வைத்தால் இந்த படமும் LCU என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும். அதனை தடுக்க லோகேஷ் இந்த முடிவை எடுத்துள்ளாராம். முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் தலைவர் 171-வது படம் LCU படமாக இருக்காது என லோகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

#image_title