LATEST NEWS
மீண்டும் படமாகும் கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் கதை.. ஹீரோயின் யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!!
தமிழ் சினிமாவில் மிகவும் துணிச்சலான பெண்ணாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் வாழ்க்கை கதை இந்தியில் டரட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக வெளியிடப்பட்டது.
அதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த படம் கன்னடம் மற்றும் மலையாளத்திலும் வெளியானது. உலகில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் சில்க் ஸ்மிதா தி அண்டோல்ட் ஸ்டோரி உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்திரிகா ரவி அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய திரைப்படங்களை நடித்து முடிக்க உள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதா தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தை எஸ் டி ஆர் ஐ சினிமா தயாரித்துள்ளது. ஜெயராம் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என பான் இந்தியா படமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
#SilkSmitha : The Untold Story🖤✨
Stars : Chandrika Ravi
Direction : Jayaram (Debut)Tamil | Telugu | Hindi | Kannada
2024 Theatrical Release!! pic.twitter.com/S67zhp43ki— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 2, 2023