ஓகே ஸ்டார்ட்….! எல்லாம் உங்களுக்காக தா … லோகேஷ் கனகராஜ்காக ஒப்புக்கொண்ட மாஸ் ஹீரோ… யாருப்பா அது?..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓகே ஸ்டார்ட்….! எல்லாம் உங்களுக்காக தா … லோகேஷ் கனகராஜ்காக ஒப்புக்கொண்ட மாஸ் ஹீரோ… யாருப்பா அது?..!!

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி முன்னணி இடத்தை பிடித்து இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்கள் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற வித்தியாசமான திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

#image_title

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. அதைத்தொடர்ந்து கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர் மீண்டும் விஜய் அவர்களுடன் சேர்ந்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

#image_title

தற்போது ரஜினி அவர்களை வைத்து 171 படத்தை துவங்க இருக்கின்றார். ஜூன் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் விஜயகுமாரின் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.

#image_title

இந்த திரைப்படத்தை லோகேஷன் நெருங்கிய நண்பரான ரத்தினகுமார் இயக்க போவதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க முடியாது என்று கூறியிருந்தார்  இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நேரடியாக சென்று ராகவா லாரன்ஸ் இடம் பேசி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் லோகேஷ் அவர்களுக்காக இந்த திரைப்படத்தில் மீண்டும் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால் படப்பிடிப்புக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement