1500 கோடி சொத்து…. 44 வயதில் 4-வது தாரம்…. காரணம் இதான்….! முதல் கணவர் சொன்ன தகவல்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

1500 கோடி சொத்து…. 44 வயதில் 4-வது தாரம்…. காரணம் இதான்….! முதல் கணவர் சொன்ன தகவல்…!!!

Published

on

தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரின் நெருங்கிய உறவினர் தான் நரேஷ் பாபு . இவரின் நான்காவது திருமணம் பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இவர் நான்காவது திருமணம் செய்து கொண்ட பவித்ராவின் முதல் கணவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

#image_title

நடிகர் நரேஷ் பாபு தெலுங்கில் பல திரைப்படங்களிலும், தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் முதலாவதாக நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவரை விவாகரத்து செய்து கொண்ட நரேஷ் பாபு இரண்டாவதாக ரேகா சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கும் ஒரு மகன் இருக்கின்றார்.

#image_title

பின்னர் இவரை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கும் ஒரு மகன் இருக்கின்றார். இவரையும் விவாகரத்து செய்த நரேஷ் பாபு நான்காவதாக கன்னட நடிகை பவித்ரா லோகேஷனை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

#image_title

கடந்து சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பவித்ராவின் முதல் கணவரான சுரேந்திர பிரசாத் என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பவித்ரா எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடியவர். அதனால் அவர் நரேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார். ஏனென்றால் அவரிடம் 1500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இதனால் தான் அவர் நான்காவதாக அவரை திருமணம் செய்து கொண்டார் என்று கூறி இருக்கின்றார்.

Advertisement
Continue Reading
Advertisement