CRIME
பகீர்..! “வெளியே வாடி” நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்… 8 மாத குழந்தையுடன் காவல் நிலையத்தில் சரண்..!!!
உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டம், ஷாதியாபாத் எல்லைக்குட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் பயந்து சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய மனைவியைப் பின்தொடர்ந்து சென்று கணவன் இக்கொடூரத்தைச் செய்துள்ளான். உயிரிழந்த பெண் ஷாதியாபாத் நகரில் அழகு நிலையம் நடத்தி வந்த குசும் பிரஜாபதி என்றும், கொலை செய்தவர் இசைக்குழு நடத்தி வரும் அவரது கணவர் ரவி (என்கிற ஹனி) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது திருமணத்தில் ஏற்பட்ட விரிசலால் பிரிந்த குசும், கடந்த 2023-ல் ரவியைச் சந்தித்து அவருடன் வாழத் தொடங்கினார். ரவி தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் குசும் அவர் மீது வழக்குத் தொடரவே, 2024-ல் இருவருக்கும் நீதிமன்றத்தில் திருமணம் நடந்தது. இதனிடையே, ரவி மீது வேறொரு பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாகக் குசும் அப்பெண்ணுடன் காவல் நிலையம் சென்றதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு வெடித்தது. அந்த வழக்கில் ரவி நிரபராதி எனத் தெரிந்து ஜாமீனில் வெளியே வந்தாலும், மனைவி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 7 மணியளவில் கையில் கத்தியுடன் குசுமின் அழகு நிலையத்திற்கு வந்த ரவி, அவளை வெளியே அழைத்துத் தாக்க முயன்றான். அதிலிருந்து தப்பி ஓடிய குசுமை 100 மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்த ரவி, அவளது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தான். ரத்த வெள்ளத்தில் மிதந்த குசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கொலை செய்த கையோடு ரவி தனது எட்டு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நேராக ஷாதியாபாத் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தான். குசுமின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைதான ரவியைக் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், இக்கொலைக்கான முழு பின்னணி குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
