CRIME
“வெளியில சொன்னா உன் வயித்தை கிழிச்சிருவேன்” சிறுமியின் வாயை கட்டி… 65 வயது முதியவரின் கொடூரம்… பிஞ்சுச் சகோதரிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை…!!
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள வகாட் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி ரம்ஜான் பகவான் என்ற குற்றம் சாட்டப்பட்ட முதியவர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு நாள் காலை பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய 10 வயது சிறுமியும், அவளது 4 வயது தங்கையும் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த முதியவர் ரம்ஜான் பகவான், 10 வயது சிறுமியின் வாயைக் கட்டி பலவந்தமாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி முதியவரின் வீட்டிற்குச் செல்வதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணிக்குச் சந்தேகம் ஏற்பட்டு, மாலையில் சிறுமியின் பெற்றோர் வேலை முடிந்து வந்ததும் அவர்களிடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் அவளிடம் தைரியம் கொடுத்து விசாரித்தபோது, அம்மாலை நடந்த கொடுமை மட்டுமல்லாமல், கடந்த மே மாதம் முதல் நான்கு முறை அந்த முதியவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளாள். மேலும், தனது 4 வயது தங்கையையும் அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் கத்தியால் வயிற்றைக் கிழித்துக்கொன்று விடுவதாக முதியவர் மிரட்டியதாலேயே இவ்வளவு நாட்கள் பயந்து அமைதியாக இருந்ததாகவும் சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வகாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ரம்ஜான் பகவானைக் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குத் தேவையான சட்ட மற்றும் உளவியல் உதவிகளை வழங்கி வரும் காவல்துறையினர், அந்த முதியவர் வேறு எந்தக் குழந்தைகளுக்காவது இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
