CRIME
“அடச்சீ… நான் பாத்துக்கிறேன்னு கூட்டிட்டு போய் அநியாயம்… மயக்கத்துல இருந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்…! 40 வருஷம் ஜெயில்..!!”
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், பல் மருத்துவ சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பல் மருத்துவ உதவியாளரான 29 வயது டெலோன் கார்சியாவிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிடியாட்ரிக் டென்டல் நிறுவனத்தில் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இவர், வழக்கமான பரிசோதனைகளின் போது 4 முதல் 6 வயதுடைய குழந்தைகளிடம் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து மாரிகோபா மாவட்ட வழக்கறிஞர் ரேச்சல் மிட்செல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணை மே 2024-ல் சாண்ட்லர் காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. 6 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், கார்சியா குழந்தையைப் பரிசோதனை என்ற பெயரில் தனியாக வேறு அறைக்கு அழைத்துச் சென்று முறையற்ற விதத்தில் தொட்டு, புகைப்படம் எடுத்ததாகத் தெரிவித்தனர். விசாரணையில், கார்சியா பெற்றோரிடம் பொய்யானக் காரணங்களைக் கூறி குழந்தைகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டது உறுதியானது. மேலும், 2022 செப்டம்பரில் எக்ஸ்-ரே எடுக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றொரு 6 வயது சிறுமியும் கார்சியா மீது குற்றம்சாட்டினார்.
கார்சியாவின் தொலைபேசியைத் தடயவியல் வல்லுநர்கள் ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் இருந்த 4 வயது சிறுமியின் ஆபாசப் புகைப்படங்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது. மே 2024-ல் கைது செய்யப்பட்ட இவர், ஆரம்பத்தில் 14 கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். கார்சியா தனது சுய பாலியல் திருப்திக்காக குழந்தைகளிடம் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அதைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று தீர்ப்பின் போது நீதிபதி சுட்டிக்காட்டினார்.
