LATEST NEWS
BREAKING: CM விஜய்க்கு பெரு அதிர்ச்சி.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு…!!
கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் தவெக நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான உத்தரவுகளை முதல்வர் விஜய் சமீபத்தில் அளித்தார். இதை எதிர்த்து, வழக்கறிஞர் என். பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து அரசாணையில் தெளிவுரை இல்லை என்றும், இது வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கி அவர்களை ஏன் சுய தொழில்முனைவோராக மாற்றக்கூடாது என்றும், சிவகாசி பட்டாசு விபத்து மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் இதேபோன்று கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
