LATEST NEWS
“பள்ளிக்கூடமா இல்லை போர்க்களமா..?! வகுப்பறையிலேயே அடிதடியில் குதித்த ஆசிரியைகள்… மாணவர்கள் முன்னே அரங்கேறிய கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!”
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகே உள்ள சின்னண்டான்கோவில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது, நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் பணி முறைகேடு புகார் அளித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தலைமை ஆசிரியை தனது பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி அளிக்கப்பட்ட இந்த புகாரால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பின்னர் அது மோதலாக மாறியது.
தான்தோன்றி மலை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை மீது அரசு பள்ளி தலைமை ஆசிரியை முறையாக பணியாற்றவில்லை என புகார் அளித்ததால் ஆத்திரம்..
தலைமை ஆசிரியையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இடம்: சின்னாண்டாங்கோவில், கரூர்#Karur |… pic.twitter.com/XHi2Io4KPP— Polimer News (@polimernews) August 3, 2026
இந்த மோதலின் போது தலைமை ஆசிரியை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் கல்வித்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளிக்கூட வளாகத்திலேயே ஆசிரியர்களுக்கு இடையே நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
