பகீர்..! வாக்கிங் சென்ற இடத்தில் விபரீதம்.. 15 நிமிடங்கள் விடமால்… பெண்ணின் கையைக் குதறிய பிட்புல் நாய்..! நொய்டா பூங்காவில் அரங்கேறிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! வாக்கிங் சென்ற இடத்தில் விபரீதம்.. 15 நிமிடங்கள் விடமால்… பெண்ணின் கையைக் குதறிய பிட்புல் நாய்..! நொய்டா பூங்காவில் அரங்கேறிய பயங்கரம்..!!

Published

on

கிரேட்டர் நொய்டாவின் செக்டார் டெல்டா 1 பூங்காவில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. அப்போது மற்றொரு நபர் தனது பிட்புல் ரக நாயை அழைத்து வந்த நிலையில், இரண்டு நாய்களும் ஒன்றையொன்று பார்த்து ஆக்ரோஷமடைந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்தி நாய்களை விலக்க அந்தப் பெண் முயன்றபோது, பிட்புல் நாய் திடீரென பாய்ந்து அவரது இடது கையைத் தனது தாடையில் பலமாகக் கவ்விப் பிடித்துக்கொண்டது.

சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அந்தப் பெண் வலியில் அலறிய நிலையில், பூங்காவில் இருந்த மற்றவர்கள் கடுமையாகப் போராடி பெண்ணை பிட்புல் நாயின் பிடியில் இருந்து மீட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணிற்கு கையில் சுமார் 12 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் சிறுவர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சம்பவத்திற்குப் பின், பெண் சிகிச்சை பெறுவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக நாயின் உரிமையாளர் ஒப்புக்கொண்டதால் இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டு, காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. எனினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, செக்டாரில் உள்ள அனைத்துப் பூங்காக்களிலும் நாய்களை அழைத்து வர குடியிருப்பு நலச் சங்கம் தடை விதித்துள்ளது; விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கௌதம் புத் நகர் நிர்வாகம் ஏற்கனவே 23 ஆபத்தான நாய் இனங்களுக்குத் தடை விதித்திருந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் கடும் கவலையை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in