“என்னது… குழந்தை பெத்துக்கிட்டா ரூ.52 லட்சமா..?! இளம் தம்பதிகளுக்கு பம்பர் ஆபரை அறிவித்த பிரம்மாண்ட நாடு… பின்னணியில் இருக்கும் காரணம் என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னது… குழந்தை பெத்துக்கிட்டா ரூ.52 லட்சமா..?! இளம் தம்பதிகளுக்கு பம்பர் ஆபரை அறிவித்த பிரம்மாண்ட நாடு… பின்னணியில் இருக்கும் காரணம் என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!”

Published

on

சிங்கப்பூரில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால் இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு வருகின்றனர். சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய நாளை முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.52 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுமட்டுமின்றி, குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in