ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! வெங்காயம் விற்றால் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை… தமிழக அரசு அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! வெங்காயம் விற்றால் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை… தமிழக அரசு அதிரடி..!!

Published

on

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா பிறப்பித்துள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது:- வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான வெங்காயம் கிடைப்பதற்காக தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 3 கட்டங்களாக வெங்காயம் பெறப்பட்டது. இந்த வெங்காயங்கள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயத்தைப் பெற்று இருப்பு வைத்தல், தரம் பிரித்தல், எடையிட்டு விற்பனை செய்தல் மற்றும் விற்பனை கணக்குகளை பராமரித்தல் ஆகிய கூடுதல் பணிகளுக்காக விற்பனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவின் அடிப்படையில் கிலோவுக்கு ரூ.2 வீதம் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகை இ.சி.எஸ். முறையில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in