CRIME
“9 மாதங்கள்… 5000 போன் கால்கள்..!” 22 வயது இளம் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு.. 44 வயது கோச்சிங் சென்டர் மாஸ்டரின் கொடூர சித்திரவதை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கடாம்பூர் பகுதியில் உள்ள கிர்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் காவலர் பிரதீக்ஷா சிங், வயது முதிர்ந்த ஒரு பயிற்சி மைய ஆசிரியரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு விவசாயக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. கடின உழைப்பிற்குப் பின் 2025-ல் உத்தரபிரதேச காவல்துறையில் காவலராகத் தேர்வான பிரதீக்ஷா, அமேதியில் உள்ள மோகன்கஞ்ச் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஆரம்பத்தில் காவலர் தேர்வுக்காக அவர் பயின்ற பயிற்சி மையத்தின் ஆசிரியரான விக்கிரம் சிங் சண்டேலா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் அவரது உயிருக்கே விபரீதமாக முடிந்துள்ளது.
ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுப் பயிற்சி மையம் நடத்தி வந்த 44 வயதான விக்கிரம் சிங்கிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரதீக்ஷாவின் வீட்டிற்கு அண்ணன்-தங்கை என்ற உறவு முறையில் வந்து சென்ற விக்கிரம் சிங், பிரதீக்ஷா வேலைக்குச் சேர்ந்த பிறகு அவரிடம் தொலைபேசியில் எல்லையற்ற முறையில் பேசத் தொடங்கியுள்ளார். கடந்த 9 மாதங்களில் மட்டும் இருவருக்குமிடையே சுமார் 5,000 அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பிரதீக்ஷாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய வரன் தேடத் தொடங்கியதால், அவர் விக்கிரம் சிங்குடனான தொடர்பைத் துண்டிக்க முயன்றுள்ளார். ஆனால் விக்கிரம் சிங்கின் தொடர் பிளாக்மெயில் மற்றும் டார்ச்சரால் மனமுடைந்த பிரதீக்ஷா, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது தனது அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மரணத்திற்கு முன்பாக பிரதீக்ஷா தனது மொபைல் போனை முழுமையாக ரீசெட் செய்திருந்த போதிலும், காவல்துறையினர் அவரது சிடிஆர் விபரங்களை எடுத்துப் பரிசோதித்த போதுதான் இந்த 5,000 போன் கால்கள் மற்றும் விக்கிரம் சிங்கின் டார்ச்சர் குறித்த முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. தன் மகளின் மரணத்திற்குப் பெண்ணை விட 23 வயது மூத்தவரான விக்கிரம் சிங் தான் காரணம் என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஆசிரியர் விக்கிரம் சிங் சண்டேலாவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
