“ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போன்… மழையை பத்தி விசாரிச்ச முதல்வர் விஜய்…” மாநகராட்சி கமிஷனர் சமீரன் சொன்ன சீக்ரெட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போன்… மழையை பத்தி விசாரிச்ச முதல்வர் விஜய்…” மாநகராட்சி கமிஷனர் சமீரன் சொன்ன சீக்ரெட்..!!

Published

on

சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக கனமழை பெய்தது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு பதிவானது. பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பிரகாசம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை 70 செ.மீ. வரை சராசரி மழை அளவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஒரே இரவில் பாரிமுனையில் மட்டும் 36 செ.மீ. அளவுக்கு அதிவேக மழை பொழிந்துள்ளது. சூப்பர் எல்நினோ தாக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில், சென்னை மாநகரில் பெய்த கனமழை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முதல்-அமைச்சர் விஜய் தங்களைத் தொடர்புகொண்டு மழை நிலவரம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in