LATEST NEWS
இது என்ன கொடுமை..! வேலை இலக்கை முடிக்காததால் 200 முறை தோப்புக்கரணம்… கம்பெனி கொடுத்த கொடூர தண்டனையால் உடலுக்குள் நிகழ்ந்த பயங்கரம்… ‘ராப்டோமையோலிசிஸ்’ நோயால் முடங்கிய சீன இளம் பெண்ணின் வாழ்க்கை..!!
சீனா, ஜெஜியாங் மாகாணம் ஹங்சோ நகரைச் சேர்ந்த 20 வயதான யாங் என்ற பெண், ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராகச் சேர்ந்த நிலையில், விற்பனை இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ரூ.600 அபராதம் அல்லது 100 முறை உட்கார்ந்து எழும் உடற்பயிற்சி தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அபராதத் தொகையைத் தவிர்க்க விரும்பிய யாங், இரண்டு இலக்குகளைத் தவறவிட்டதற்காக அலுவலகத்திலேயே சக ஊழியர்கள் முன்னிலையில் 200 முறை உட்கார்ந்து எழும் தண்டனையைத் தேர்ந்தெடுத்துச் செய்தார்.
தண்டனை முடிந்து வீட்டிற்குச் சென்ற யாங்கிற்கு அன்றிரவே கடுமையான தசை வலியும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டதுடன், அடுத்த சில நாட்களில் அவரால் நிற்கவோ கால்களை நகர்த்தவோ முடியாமல் போனது. மேலும் அவரது சிறுநீர் அடர் தேநீர் நிறத்தில் வெளியேறியதால் அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
யாங்கை பரிசோதித்த மருத்துவர்கள், குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியால் தசை நார்ப்பொருட்கள் சிதைந்து இரத்தத்தில் கலக்கும் ‘ராப்டோமையோலிசிஸ்’ என்ற தீவிர தசைச் சிதைவு நோய் அவருக்கு ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் சீன சமூக வலைத்தளங்களில் பணியிட வன்கொடுமைகளுக்கு எதிராகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
