“என்ன ஒரே பொம்பள பிள்ளையா பெத்து போடுத” 4-வது பெண் குழந்தை பிறந்ததால் விபரீதம்… அந்தரங்க உறுப்பில் உதைத்து… முத்தலாக் கூறி மனைவியை விரட்டிய கணவன்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“என்ன ஒரே பொம்பள பிள்ளையா பெத்து போடுத” 4-வது பெண் குழந்தை பிறந்ததால் விபரீதம்… அந்தரங்க உறுப்பில் உதைத்து… முத்தலாக் கூறி மனைவியை விரட்டிய கணவன்..!!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் சிபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகக் பரபரப்பு புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது படுகாயமடைந்த நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், அண்மையில் அவர் நான்காவதாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறப்பதைக் காரணம் காட்டியும், பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியும் விபரீதத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கம்புகளாலும் கைகளாலும் அந்தப் பெண்ணை அவரது அந்தரங்க உறுப்புகள் உட்படப் பல இடங்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

Advertisement

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கணவர் அவருக்கு சட்டவிரோதமான முறையில் ‘முத்தலாக்’ கூறி வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார். மேலும், அவரது ஆண் குழந்தையையும் தன்னிடமே பறித்து வைத்துக் கொண்டுள்ளார். இது குறித்துப் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மருத்துவ அறிக்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in