CINEMA
சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ‘காலா’ பட நடிகை
நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு தனது நீண்ட நாள் காதலருடன் மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு சாக்ஷி அகர்வால். முதல் படத்திற்குப் பின் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். அதன்பின் அவருக்கு வரிசையாக நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அந்தவகையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘விஷ்வாசம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கைவசம் 2 புதிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பிட்னஸ்க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடிக்கடி தனது உடற்பயிற்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று அவருக்கு அவருடைய பள்ளி பருவ தோழனும், நீண்ட நாள் காதலனுமான நவநீத் என்பவருடன் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது.
அந்த புகைப்படங்களை சாக்ஷி தனது சமூக பகிர்ந்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.