“மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து காலி” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து காலி” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

Published

on

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் வேறு மதத்திற்கு மாறினால், அவரது பட்டியலின அந்தஸ்து மற்றும் அதன் அடிப்படையிலான சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர்த்து, கிறித்தவம் அல்லது பிற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் செல்லாது என்ற ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முழுமையாக உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் அமர்வு, 1950-ன் அரசியலமைப்பு உத்தரவுப்படி இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதத்தினர் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மதம் மாறியவுடன் பழைய அந்தஸ்து முடிவுக்கு வருவதால், ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Advertisement

மதம் மாறிய ஒருவர் மீண்டும் எஸ்சி அந்தஸ்தைப் பெற, அவர் பிறப்பால் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மீண்டும் தனது பழைய மதத்திற்குத் (இந்து, சீக்கியம், பௌத்தம்) திரும்ப வேண்டும், மற்றும் அவரது சொந்த சாதி அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மூன்று முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in