LATEST NEWS
ச்சீ இவரெல்லாம் மனுஷனா..? போதையில் போலீஸ் அதிகாரி செய்த காரியம்… டிக்கெட் ஆபீசுக்குள் நுழைந்து ASI செய்த அசிங்கம்… வீடியோவை அசால்ட்டாக தட்டிவிட்டு தூக்கிய டி.சி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் செய்ததாகக் கூறப்படும் ஒரு வெட்கக்கேடான செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் இருந்த அந்த காவல் உதவி ஆய்வாளர், ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்தின் உள்ளேயே சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இந்தச் சம்பவத்தை தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து, ஜான்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் இது குறித்து முறைப்படி புகார் அளித்துள்ளார்.
https://twitter.com/Dinehshukla/status/2081826705686368499/video/1
சீருடையில் இருந்துகொண்டு பொது இடத்தில் இதுபோன்ற கண்ணியமற்ற மற்றும் முகம்சுளிக்கும் வகையில் நடந்துகொள்வது மிகவும் கடுமையான குற்றமாகும். எனவே, இந்தச் சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
