LATEST NEWS
“நான் முஸ்லிம்… கோயில் தேவையற்றது..! முன்னாள் தலைமைச் செயலாளரின் மருமகள் சர்ச்சை பேச்சால்… கொதித்தெழுந்த மக்கள்..! போபாலில் பரபரப்பு..!!”
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சூனா பட்டா பகுதியின் ஆம்ரபாலி என்லேவ் என்ற குடியிருப்புப் பகுதியில், கோயில் அருகே நடைபாதை அமைப்பது தொடர்பாக எழுந்த தகராறில், அம்மாநில முன்னாள் தலைமைச் செயலாளரின் மருமகளான உஸ்மா ரஸா என்ற அஞ்சலி சிங் கோயிலைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 24 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, கோயிலுக்குச் செல்லும் பாதையில் உஸ்மா தனது காரை நிறுத்தியிருந்த நிலையில், பொது நிலத்தில் நடைபாதை அமைப்பதை எதிர்த்து அவர் குடியிருப்புவாசிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது, உஸ்மா ரஸா “நான் பிறப்பால் முஸ்லிம், திருமணத்தால் இந்து” எனக் கூறி, அங்கே குடியிருப்பு வளாகத்தில் உள்ள கோயிலை “Bloody Thing” என்று அவதூறாகப் பேசியுள்ளார். மேலும், அங்குள்ள குடியிருப்புவாசிகள் நிலத்திற்கான ஆவணங்களைக் கேட்டபோது, அவர் தொடர்ந்து சத்தமிட்டு கோயிலைக் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. உஸ்மாவின் இந்தச் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி வேகமாகப் பரவியது.
கோயில் குறித்து உஸ்மா ரஸா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், அவரின் இந்த அவதூறுப் பேச்சு சனாதன தர்மத்தின் நம்பிக்கையையும் மக்களின் மத உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் போபாலில் உள்ள சூனா பட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்துக் கூட்டுப் புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
