LATEST NEWS
“சாகும் வரை CM விஜய் கூடத்தான்…!” தவெக MLA-க்களை மாற்றுக் கட்சிக்கு இழுக்கவே முடியாது… சட்டப்பேரவையில் அமைச்சர் N. ஆனந்த் ஓபன் டாக்..!!
தமிழக சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக் கூட மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என நேரடியாகத் தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் நடத்தி தங்கள் பக்கம் இழுக்க ஆளும் திமுக முயன்றதாகக் கூறி வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில்தான், அவர் இந்த அழுத்தமான கருத்தைப் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தங்களது தலைவர் விஜய் மீது தங்களுக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், சாகும் வரை முதல்வர் விஜய்யுடன் தான் இருப்போம் என்றும் உறுதிபடக் கூறினார். கட்சியின் தொண்டர்களை தலைவர் என்றும் மதிப்பார் என்றும், அவர்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
