LATEST NEWS
“பதவியை ராஜினாமா பண்ணுங்க…” 2 மதிமுக MLA-க்களை CM விஜய் வற்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு… திமுக வேட்பாளர் பரந்தாமன் கிளப்பிய பூகம்பம்..!!
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்கள் பக்கம் அழைத்து வருவதாகத் தமிழக முதல்வர் விஜயிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியளித்திருந்ததாகத் திமுக வேட்பாளர் பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இருப்பினும், இந்த முயற்சி கைக்கூடாமல் போனதாகத் தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெகவில் இணைவதற்காகத் தங்களை திமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் விஜய் வற்புறுத்தியதாகக் கூறிய அவர், இதன் பின்னணியில் பெரும் பேரம் பேசப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்களும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகத் திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
