LATEST NEWS
“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..!” சிறுவனைக் கடித்துக் குதறிய அண்டை வீட்டு நாய்.. குறுக்கே பாய்ந்த ஹீரோ… அப்புறம் நடந்த ட்விஸ்ட்.. நடுங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
மெக்சிகோவில் அண்டை வீட்டு வளர்ப்பு நாயான ‘மொன்டானா’ திடீரென தெருவுக்குள் புகுந்து, ‘டியாகோ’ என்ற சிறுவனை கொடூரமாக தாக்கத் தொடங்கிய சம்பவம் பார்ப்போரை உறைய வைத்துள்ளது. நாய் தன்னை கடித்து குதறியதால் நிலைதடுமாறிய சிறுவன் டியாகோ, பயத்தில் அலறித்துடித்து உதவிக்காக கூக்குரலிட்டான். அச்சமயம் அந்த இடமே மரண பயத்தில் மூழ்கியிருந்தது.
சிறுவனின் மரண ஓலத்தைக் கேட்டு, அங்கிருந்த ‘மிகுவேல்’ என்பவர் நொடியும் தாமதிக்காமல் களத்தில் குதித்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று, நாய் மொன்டானாவிடமிருந்து சிறுவன் டியாகோவை தீரத்துடன் மீட்டார். எனினும், ஆவேசமடைந்த அந்த நாய் மிகுவேலை திருப்பி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். தற்போது இந்த நெஞ்சை பதறவைக்கும் தியாகத்தின் வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது
