“திக் திக் நிமிடங்கள்…! டேஷ்போர்டுல இருந்து வந்த அந்த ஒரு வாசனை…” ஓட்டுநரின் ஒரு நொடி சுதாரிப்பால் தப்பிய 35 பிஞ்சு உயிர்கள்…! புனே நெடுஞ்சாலையில் நொடியில் சாம்பலான பள்ளி பேருந்து… பதற வைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திக் திக் நிமிடங்கள்…! டேஷ்போர்டுல இருந்து வந்த அந்த ஒரு வாசனை…” ஓட்டுநரின் ஒரு நொடி சுதாரிப்பால் தப்பிய 35 பிஞ்சு உயிர்கள்…! புனே நெடுஞ்சாலையில் நொடியில் சாம்பலான பள்ளி பேருந்து… பதற வைக்கும் காட்சி..!!

Published

on

புனேவின் வாகாட் பகுதியில் உள்ள மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலைக்கு அருகில் வியாழக்கிழமை அன்று ஒரு தனியார் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து, இந்திரா நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் பாதுகாப்பாக இறக்கிவிட்டுத் திரும்பிய போது இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த போது பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாணவர்களைப் பள்ளியில் இறக்கிவிட்டுத் திரும்பும் வழியில், பேருந்தின் டேஷ்போர்டில் இருந்து புகையும் எரிந்த வாசனையும் வருவதை ஓட்டுநர் கவனித்துள்ளார். ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாகப் பேருந்தைச் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டுப் பாதுகாப்பாக வெளியேறினார். தொடர்ந்து, மெக்கானிக் ஒருவரைத் தொடர்புகொண்டு அழைத்தார்; ஆனால் மெக்கானிக் வரத் தாமதமானதால், அதற்குள் பேருந்தில் தீ மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.

Advertisement

நிலைமை தீவிரமடைந்ததைக் கண்ட ஓட்டுநர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த 2 முதல் 3 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், இந்தத் தீ விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in