LATEST NEWS
“நீ நல்லா இருந்தா போதும்டி…” கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. ரயில் நிலையத்தில் கச்சிதமாக தூக்கிய கணவன்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் பாருங்க..!!
உத்தர பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தில், கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் பிடிவாதத்தைப் புரிந்து கொண்ட கணவர், தானே முன்னின்று அவருக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் வெல்டிங் வேலை செய்து வரும் ஜீவநாத் ராஜ்பார் என்பவரின் 45 வயது மனைவி சரிதாவுக்கு, ரயிலில் பட்டாணி விற்கும் 25 வயது வாலிபரான அஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. மூன்று குழந்தைகளுக்குத் தாயான சரிதா சில நாட்களுக்கு முன்பு தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய நிலையில், கணவர் ஜீவநாத் பல இடங்களில் தேடி அவர்களை ஒரு ரயில் நிலையத்தில் கண்டுபிடித்துள்ளார்.
அப்போது சரிதா தன்னிடம் கெஞ்சிக் கேட்ட கணவனுடன் செல்ல மறுத்து, வாழ்நாள் முழுவதும் காதலனுடன் தான் வாழ்வேன் என உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த கணவர் ஜீவநாத், தனது மனைவியின் விருப்பப்படியே அவர்களைப் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இருவருக்கும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைத்தார். இந்த வினோதமான முடிவு குறித்து ஜீவநாத் பேசுகையில், மனைவியுடன் வாழவே விரும்பியதாகவும் ஆனால் அவருக்கு விருப்பம் இல்லாததால் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்ததாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் சரிதா, தனது குடும்ப செலவுகளுக்குக் கணவர் போதிய பணம் அனுப்பாமல் சண்டையிட்டு வந்ததே இந்த முறிவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
