ஐயோ கடவுளே..! சிறுமி குளித்த போது நடந்த கொடூரம்.. வாக்குவாதம் முற்றியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உறவினர்.. நடந்தது என்ன..? நெல்லையில் பயங்கர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே..! சிறுமி குளித்த போது நடந்த கொடூரம்.. வாக்குவாதம் முற்றியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உறவினர்.. நடந்தது என்ன..? நெல்லையில் பயங்கர சம்பவம்..!!

Published

on

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபரின் செயலைத் தட்டிக்கேட்ட சிறுமியின் சித்தப்பாவுக்குக் கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பத்தி மேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (18) என்ற மேளக்கலைஞர், அருகிலுள்ள கிராமத்து வீடொன்றின் குளியலறையில் சிறுமி குளிப்பதைப் பின்பக்கமாகச் சென்று எட்டிப்பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி சத்தம் போடவே சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் உறவினர்களுடன் சதீஷின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கடுமையான தகராறில் ஆத்திரமடைந்த தந்தை ராஜூ, சிறுமியின் சித்தப்பாவைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் உடனடியாக அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கத்திக்குத்து நடத்திய தந்தை ராஜூவைக் கைது செய்தனர். அதேபோல, சிறுமியை எட்டிப்பார்த்த சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in