“சொன்ன வார்த்தைக்காக இப்படியா..?” தேர்தல் மேடையில் விட்ட சவால்… நண்பர்கள் ஞாபகப்படுத்தியதும் நடந்த பகீர் ட்விஸ்ட்.. தவெக தொண்டர்களையே வியக்க வைத்த அதிமுக பிரமுகர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சொன்ன வார்த்தைக்காக இப்படியா..?” தேர்தல் மேடையில் விட்ட சவால்… நண்பர்கள் ஞாபகப்படுத்தியதும் நடந்த பகீர் ட்விஸ்ட்.. தவெக தொண்டர்களையே வியக்க வைத்த அதிமுக பிரமுகர்..!!

Published

on

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது விட்ட சவாலில் தோல்வியடைந்த நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பால நந்தகுமார், தனது மீசையை முழுமையாக மழித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தல் பிரசார மேடைகளில் பேசிய பால நந்தகுமார், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தனது மீசையை எடுத்துக் கொள்வதாகப் பகிரங்கமாகச் சவால் விடுத்திருந்தார். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் த.வெ.க. பெரும் மாயாஜாலம் காட்டி 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

இந்நிலையில் த.வெ.க. ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பால நந்தகுமாரின் நண்பர்கள் சிலர் அவர் விட்ட சவாலை நினைவூட்டியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், தனது சவாலைக் காப்பாற்றும் வகையில் மீசையை எடுத்துக் கொண்டு, அந்தப் புகைப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு, தற்போது 2-வது முறையாக அ.தி.மு.க.வின் நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் பால நந்தகுமாரின் இந்த அதிரடிச் செயல் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in