முதலமைச்சருடன் சிரித்துப்பேசிய சில நாள்களிலேயே விபரீதம்.. முதல்வர் அருகில் அமர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி மர்ம மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதலமைச்சருடன் சிரித்துப்பேசிய சில நாள்களிலேயே விபரீதம்.. முதல்வர் அருகில் அமர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி மர்ம மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் போலவரம் மாவட்டம், ரம்பசோடவரம் மண்டலத்தில் உள்ள இருளப்பள்ளி புதிய காலனியைச் சேர்ந்தவர் முர்ரம் ஷிவானி. உள்ளூரில் உள்ள ஜிபி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று காலை வீட்டில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அருகில் அமர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடிய மாணவி ஷிவானி தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சருடன் இயல்பாகப் பேசி சிரித்த மாணவி, திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்ததை அப்பகுதி மக்களால் நம்ப முடியவில்லையென வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement

https://twitter.com/greatandhranews/status/2081639725656342920/video/2

காலை நேரத்தில் மாணவி ஷிவானி உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இச்சம்பவத்தை சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in