LATEST NEWS
இதென்ன அநியாயமா இருக்கு..? “என் முன்னாடி நிக்காதே.. போ” 130 ரூபாய்க்கு சில்லறை இல்லை.. டிக்கெட் தராமல் பயணியிடம் எகிறிய பெண் அதிகாரி.. நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!!
ரயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணி ஒருவரிடம், அங்குப் பணியிலிருந்த பெண் கிளார்க் பணமாக வாங்க மறுத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பயணி ₹130 மதிப்புள்ள டிக்கெட்டிற்கு ₹150 ஆகக் ரொக்கப் பணத்தைக் கொடுக்க முயன்றபோது, தன்னிடம் சில்லறை இல்லை எனக் கூறி அந்தப் பெண் அதிகாரி டிக்கெட் தர மறுத்துள்ளார். மேலும், “இப்போது அனைவரும் ஆன்லைனில்தான் பணம் செலுத்துகிறார்கள், என்னிடம் ஏன் விவாதம் செய்கிறீர்கள்?” என்று மிகவும் அதிகாரத்தோடும், கோபத்தோடும் அந்தப் பயணியை முன்னால் இருந்து நகருமாறு அவர் சத்தமிட்டுள்ளார்.
இந்தக் குறிப்பிட்ட சம்பவம் எக்ஸ் தளத்தில் ‘ஜெம்ஸ் ஆஃப் ரயில்வே’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், இன்றைய டிஜிட்டல் மற்றும் யுபிஐ (UPI) காலத்தில் சில்லறைத் தட்டுப்பாடு இருப்பது இயல்புதான் என்றும், பயணிகள் சரியான தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் கிளார்க்கிற்கு ஆதரவாகப் பேசுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, அரசாங்க சேவை மையமான ரயில்வே கவுண்ட்டர்களில் ரொக்கப் பணத்தை வாங்க மறுப்பது சட்டப்படி தவறு என்றும், பொதுமக்களிடம் அந்தப் பெண் அதிகாரி காட்டிய அராஜகமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை கண்டிக்கத்தக்கது என்றும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, அவசரத் தேவைகளுக்காக டிஜிட்டல் வசதி இல்லாமல் ரயில் நிலையங்களுக்கு வரும் சாமானிய மக்களின் நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தாலும், இதுபோன்ற கவுண்ட்டர்களில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை முழுமையாக நிராகரிக்கக் கூடாது என்றும், ஊழியர்களின் வாடிக்கையாளர் சேவை அணுகுமுறையை முறைப்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளப் பக்கங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
