LATEST NEWS
“என்னையே ஏமாத்துறியாடி” பைக்கில் கட்டி 100 மீட்டர் இழுத்துச் சென்ற கொடூர காதலன்… இணையத்தையே நடுங்க வைத்த வீடியோ..!!!
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் காதலில் ஏற்பட்ட துரோகத்தால் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு வாக்களித்த காதலன் தன்னை ஏமாற்ற முயன்றதால், அவனுடன் ஏற்பட்ட தீவிர தனிப்பட்ட தகராறில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என அந்த நபர் திட்டவட்டமாக மறுத்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பதற்றத்தில், வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியைப் பிடித்துள்ளார்.
https://twitter.com/rameshofficial0/status/2081789778417377770/video/1
ஆனால், சிறிதும் இரக்கமின்றி அந்த நபர் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரிக்கவே, அந்தப் பெண் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
