LATEST NEWS
இவரு மனுஷனா… இல்ல வண்டியா..?! 22 ஆண்டுகளாக உணவுக்குப் பதில் ‘இன்ஜின் ஆயில்’…! ஓசூரில் மக்களை அலறவிட்ட கூலித் தொழிலாளி..!!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த 48 வயதான குமார் என்பவர், பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை தினமும் குடித்து வருகிறார். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் இவரை அன்போடு ‘ஆயில் குமார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
ஆண்டுதோறும் ஓசூர் வழியாக சபரிமலைக்குச் செல்லும் இவர், இம்முறையும் இருமுடி கட்டி சபரிமலை நோக்கிப் புறப்பட்டார். வழியில் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்த பின்னர், தனது பாக்கெட்டில் வைத்திருந்த பழைய இன்ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் வேகமாகப் பருகினார். இவரின் இந்த விசித்திரமான செயலைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியமடைந்தனர்.
தனது இந்தப் பழக்கம் குறித்துப் பேசிய குமார், தினமும் லிட்டர் கணக்கில் பழைய இன்ஜின் ஆயிலை மெக்கானிக் கடைகளில் இருந்து கேட்டு வாங்கிப் பருகுவதாகத் தெரிவித்தார். மேலும், எப்போதாவது மட்டுமே டீ குடிப்பதாகவும், மற்ற சாதாரண உணவுகளைச் சாப்பிட்டால் தனது உடல் அதை ஏற்றுக்கொள்ளாது என்பதால், உணவுகளைத் தவிர்த்துவிட்டு இன்ஜின் ஆயிலைக் குடித்தே வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
