LATEST NEWS
திக் திக்…! டேய் யாருடா நீ..? ஒரே முட்டில் SUV கார் டயரை பஞ்சராக்கிய பிரம்மாண்ட காட்டு எருமை.. நெஞ்சை பதறவைக்கும் நொடிகள்..!!
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற எஸ்யூவி ரகக் கார் ஒன்றைப் பிரம்மாண்டக் காட்டு எருமை ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவிற்குள் வாகனங்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டு எருமை ஒன்று காரின் மிக அருகில் சென்றதால் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
வெறும் 11 நொடிகள் மட்டுமே கொண்ட அந்த அதிரடி வீடியோவில், சாலையோரம் நடந்து வரும் காட்டு எருமை திடீரெனத் தனது கூர்மையான கொம்புகளால் காரின் டயரை முட்டிப் பதம் பார்ப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. எருமையின் பலத்த முட்டலால் காரின் டயர் உடனடியாகப் பஞ்சராகிப் பலத்த சத்தத்துடன் காற்று வெளியேறியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபரீத மோதலில் காரில் இருந்த சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.
https://twitter.com/i/status/2079954318070071718
காட்டு விலங்குகளின் வாழ்விடங்களுக்குச் செல்லும்போது அவற்றுக்கு மிக அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இது போன்ற பெரிய விலங்குகள் தாக்க முற்பட்டால், ஓடாமல் பெரிய மரங்கள் அல்லது கார்களுக்குள் மறைந்து கொள்ள வேண்டும் என்றும், தப்பிக்க வழியில்லாத பட்சத்தில் தலையைப் பாதுகாப்பாக மூடிக்கொண்டு தரையில் சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
