LATEST NEWS
“ஜான்வி கபூர் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போனி கபூர்”….! விரைவில் நல்ல செய்தி காத்திருக்கு…!!!
போனி கபூர் தனது மகளான ஜான்விகபூர் காதலை அங்கீகரித்து இருப்பதாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக வளம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இந்த தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர் இவரும் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் ஷிகர் பகாரியா என்பவரை காதலித்து வருவதாக பல ரூமர்கள் பரவி வருகின்றது. இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுசில்குமார் சிண்டேவின் பேரன் ஆவார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சென்று வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜான்வி கபூரின் 27 வது பிறந்த நாளை காதலன் சிக்கர் பகாரியாவுடன் கொண்டாடியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இது குறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி இருக்கின்றார். அப்போது மகள் ஜான்விக் கபூர் மற்றும் ஷிகர் பகாரியா காதலை மனமாற வரவேற்கிறேன். விரைவில் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த செய்தி தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.