LATEST NEWS
பிக்பாஸ்க்கு பிறகு ரக்ஷிதாவுடன் காதலா?…. பேட்டியில் ராபர்ட் மாஸ்டர் கொடுத்த பதிலடி…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. அப்படி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏழு சீசன்களை முடித்துள்ளது. பிக் பாஸ் 6-வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

#image_title
ராபர்ட் மாஸ்டர், ரட்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், மைனா நந்தினி, ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, ஷிவிங், சாந்தி, ஜி பி முத்து என்று மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரட்சிதாவுக்கு இடையேயான சில காட்சிகளை சேர்த்து வைத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள்.

#image_title
அது மட்டும் இல்லாமல் வெளியில் வந்த பிறகும் இவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்து வந்தார்கள் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராபர்ட் மாஸ்டர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரட்சிதாவை பார்க்கவில்லை என்றும் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்திருக்கின்றார். மேலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.