LATEST NEWS
குக் வித் கோமாளி பிரபலத்தை காதலிக்கிறாரா அம்மு அபிராமி?…. மாறி மாறி கலாய்க்கும் சிவாங்கி, குரேஷி…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோவும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிய அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியின் இயக்குனரை காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. நடிகை அம்மு அபிராமி தமிழில் ராட்சசன், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இவர் குக் வித்து கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.

#image_title
படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் உடன் அம்மு அபிராமி காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. சமீபத்தில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அம்மு அபிராமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த சிவாங்கி மற்றும் குரேஷி ஆகியோர் மாறி மாறி அம்மு அபிராமியை கலாய்த்து வருகிறார்கள்.