LATEST NEWS
சித்தி சீரியலில் நடித்த நீனாவ ஞாபகம் இருக்கா?…. அவங்க இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?…!!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல நடிகர்கள், நடிகைகளை நாம் பார்த்திருக்கும். அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்னர் குடும்பம் என செட்டிலான ஒரு நடிகையைப் பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம். அவர்தான் நீனா.
1990 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதிலும் கற்பூர பொம்மை ஒன்று என்ற அம்மா சென்டிமென்ட் பாடலில் மிகவும் அழகாக இவர் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து கமலஹாசன் உடன் நாயகன், அஜித்துடன் ராசி, பிரகாஷ்ராஜுடன் விடுதலை அது மட்டும் இல்லாமல் ஒரு சில சாமி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் வந்த நீனா சித்தி என்ற தொடரில் காவிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு இவர் சினிமா பக்கமே வரவில்லை. திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலான இவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியானது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சித்தி சீரியலில் வந்த நீனாவா இது? அடையாளமே தெரியலையே என்று கூறி வருகிறார்கள்.