15 வயதை குறைத்து செம ஸ்டைலாக மாறிய நடிகர் சிம்பு… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

15 வயதை குறைத்து செம ஸ்டைலாக மாறிய நடிகர் சிம்பு… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது வரை திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் சிம்பு பிஸியாக சினிமாவில் நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்ட நிலையில் சிம்புவின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் உள்ளனர்.

Advertisement

அதாவது அந்த புகைப்படத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்படுகின்றார். தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த ரசிகர்கள் எஸ் டி ஆர் 48 திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement