LATEST NEWS
தயவு செஞ்சு என்னை கருணை கொலை பண்ணிடுங்க… இறப்பதற்கு முன்பு கண்ணீர் விட்டு கதறிய அங்காடித் தெரு நடிகை சிந்து…!!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சிந்து. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் தலைகாட்டிய சிந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுவயதில் இருந்து வறுமையில் ஆடிவந்த இவருக்கு வாழ்வில் ஏகப்பட்ட கொடுமைகளும் வலிகளும் சோகங்கள் மட்டுமே நிறைந்திருந்தன.
இவருக்கு 14 வயதில் அவரது வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதே ஆண்டு குழந்தையும் பிறந்த நிலையில் நடிகை சிந்து கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த நிலையில் தனது குழந்தையை காப்பாற்ற போராடியதையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இந்நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த சிந்துவின் ஒரு பக்க மார்பகம் கசாப்பு கடையில் கறியை வெட்டி எடுப்பது போல மருத்துவர்கள் வெட்டி எடுத்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கண்ணீருடன் அவர் வீடியோ வெளியிட்டார். இப்படி வலியுடனும் வேதனையுடனும் தான் வாழ விரும்பவில்லை எனவும் தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்றும் நடிகை சிந்து கெஞ்சியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை இவர் உயிரிழந்த நிலையில் இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.