LATEST NEWS
என்னது மீண்டுமா?.. நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது வரை திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் சிம்பு பிஸியாக சினிமாவில் நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்ட நிலையில் சிம்புவின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது சிம்பு தேசிங்கு பெரியசாமி உடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் சிம்பு உடல் எடை அதிகமாக இருந்ததால் அவர் மீண்டும் குண்டாகி விட்டாரா என பலரும் பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.