பேரனை தூக்கி கொஞ்சம் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

பேரனை தூக்கி கொஞ்சம் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!!

Published

on

இந்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரவீனா டாண்டன். இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். அதேசமயம் சாது என்ற தமிழ் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு இவர் பூஜா மற்றும் சாயா ஆகியோரை அவர்களின் 11 மற்றும் எட்டு வயதில் தத்தெடுத்தார்.

இருந்தாலும் 2003 ஆம் ஆண்டு ரவீனாவின் ஸ்டம்புடு பட தயாரிப்பின் போது பட விநியோகஸ்தரான அனில் தடாணி என்பவரை காதலித்த நிலையில் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 25ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு ஜூலையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே இவர் தத்தெடுத்து வளர்த்த சாயாவுக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். தன்னுடைய பேரனின் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்த இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.